Sunday, 11 February 2018

தவணை

              விக்ரம் bikeஇல் எதையோ நினைத்துக் கொண்டு வருகிறான். அவனது மனதில்
(வந்தாரை வாழ வைக்கும் சென்னை. இந்த பரபரப்பான சென்னையில் நானும் ஒரு அங்கம். பொறந்தது வளந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி என்றாலும் வேலை கிடைத்தது சென்னையில்தான். இப்பொழுது என் காதில் விழுகிறது அனைத்தும் என் நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்பவர்களின் குரல்கள்.)

Friend 1 :Royal enfiled  வாங்கியிருக்கலாம்.
Friend 2 :DUKE super bike. நீ அதை வாங்கிருக்கலாம்.
Friend 3 :மச்சி நம்ம ராஜா 3 மாசத்துக்கு முன்னாடித்தான் R15 வாங்கிருக்கான். Installment ஆஹ் இருந்தாலும். Bike செம look ஆஹ் இருக்கும். நீ அதை கூட வாங்கிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு இப்டி basic model ல போய் bike வாங்கியிருக்கியே????

             டீ கடையில் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று ஒரு டீ என்று மாஸ்டரிடம் சொல்கிறான். அப்பொழுது அவனது நண்பன் ராஜா அங்கே வருகின்றான். ராஜாவை பார்த்ததும் விக்ரம் 2 டீ என்று கூறிவிட்டு தன் நண்பனை பார்த்து,
பேர்ல தான ராஜா ??? ஏதோ இந்த ஊருக்கே ராஜா மாதிரி எப்போ பார்த்தாலும் busy ய வே இருக்குற. என்று நக்கலாக கேட்கிறான். அதற்கு ராஜா, உனக்கென்ன MNC ல work பண்ற. Ac ல job. ஆனா நா அப்படியா??? மார்க்கெட்டிங் job. நா அலயத்தான் செய்யணும்.
டீ மாஸ்டர் இருவரிடமும் டீயை கொடுக்கிறார். இருவரும் டீ குடிக்கும் போது ராஜா விக்ரமை பார்த்து, மச்சான் ஒரு 1000 இருக்குமா என்று கேட்கிறான். விக்ரம் mobile ஐ பார்த்துக் கொண்டே போன வாரம் தானடா salary போட்டாங்க. அதுக்குள்ள என்னாச்சு???  என்று கேட்கிறான். அதற்கு ராஜா credit card ல amount swipe பண்ணிருந்தேன். அதை பிடிச்சிட்டாங்கடா.  இந்த month bike due கட்ட பணம் இல்லடா. நீ இந்த month கொடு. அடுத்த month நா தந்துடுறேன் என்கிறான்.

             பின்பு ராஜா, friends எல்லாம் சொல்லும் போது ஒரு ஆசையிலே நா இந்த bike ஐ எடுத்துட்டேன். இப்போ இதுக்கு due கட்ட முடியாம கஷ்ட படுறேன். முதலிலேயே think பண்ணிருக்கணும். அப்போ விட்டுட்டேன். இப்போ நினைச்சா கஷ்டமா இருக்கு என்கிறான்.
ராஜா சொல்லி முடிக்கும் போது, அவனது mobile இல் message sound கேட்கிறது. அவன் எடுத்து பார்க்கும் போது, விக்ரம்  நாம ஆசை படுறதுல தப்பு இல்லை. ஆனா அது நமக்கு சரியா இருக்குமா?? நம்மால் சமாளிக்க முடியுமா??? இதெல்லாம் முடிவு பண்ணிக்க வேண்டும். உன்னோட வேலைக்கு நல்ல mileage கொடுக்கிற பைக்கை வாங்கிருக்கணும். இப்போ கஷ்டம் யாருக்கு???. என்று கூறி விட்டு, உன்னோட account கு 1000 அனுப்பியிருக்கேன் என்கிறான் விக்ரம்.

ராஜாக்கு விக்ரமிடம் நன்றி சொல்ல, இருவரும் டீ குடித்து விட்டு கிளம்புகின்றனர்.

குறள் 832..

http://www.ytamizh.com/thirukural/kural-832/

No comments:

Post a Comment