சென்னையின் மிக முக்கியமான இடம். Signalஇல் மற்ற வாகனச் சத்தங்களின் நடுவே மிகவும் அமைதியாக தன் மகனின் செயல்களை ரசித்தவாறு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார் அகிலன். தான் செய்யும் செயல்களை பார்த்து தனது மகனும் அதே செயல்களை செய்வதை உணர்ந்த அகிலன் தன்னுடைய செயல்களில் மிகவும் கவனமாக இருப்பார்.
AC கார் என்பதால் வெளியில் நடக்கும் சச்சரவுகள் தெரியாமல் விளையாடி கொண்டு இருந்தான் அகிலனின் மகன் கேஷவ். அகிலனின் பக்கம் கார் கதவை தட்டும் சத்தம். வெளியில் ஒரு சிறு குழந்தை. கையில் ஒரு உடைந்த தட்டு. அணிந்திருக்கும் உடையை பார்த்ததும் அந்த குழந்தையின் கஷ்டம் அகிலனுக்கு தெரிந்தது. பின்னால் திரும்பி தனது மகனை பார்த்தார் அகிலன்.
வெளியில் இருந்த அந்த குழந்தை "ஐயா சாப்பிட்டு 3 நாள் ஆச்சு. தர்மம் பண்ணுங்க" என்று கேட்டது. அகிலன் தன் மகனை பார்த்து கொண்டே அந்த குழந்தைக்கு தனது pocketஇல் இருந்து 10 ருபாய் எடுத்து கொடுத்து விட்டு தன் மகனைப் பார்த்து சிரித்தார். கேஷவ் தன் தந்தையைப் பார்த்து சிரித்தான்.
தன் மகனுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்த சந்தோசத்தில் வீட்டிற்க்கு வந்த அகிலன் தனது மகனை ரூமில் விளையாட விட்டு விட்டு குளித்து விட்டு வந்தவருக்கு அந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார். அவர் கண்ட காட்சி. கேஷவ் கண்ணாடி முன்பு நின்று கொண்டு signalஇல் பார்த்த குழந்தையைப் போல நடித்து பார்த்துக் கொண்டிருந்தான். உடனடியாக கேஷவ் பக்கத்தில் சென்று என்னாச்சு கேஷவ் ஏன் இப்படி நடிச்சிட்டு இருக்க??? என்று கேட்டார். அப்பா எனக்கும் பசிச்சதுனா இப்டிதான கேக்கணும்??? என்று கேஷவ் தனது மழலைக் குரலில் கேட்டான்.
அகிலன் தன் மகனைப் பார்த்து உனக்குப் பசித்தால் நீ உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து வாங்கி சாப்பிடு என்றார். ஆனால் என்னிடம் பணம் இல்லை என்றால் என்ன பண்ணுவது என்றான். நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போனா உன்னிடம் பணம் இருக்கும். நீ நினைத்ததை வாங்கி கொள்ளலாம் என்று கூறினார். அப்போ படிச்சா பணம் கிடைக்குமா அந்த அக்கா மாதிரி ரூபாய் கேக்க வேண்டாமா என்றான் கேஷவ்.
தன் மகன் புரிந்து கொண்டான் என்ற சந்தோசத்தில் அகிலன் ஆமா கேஷவ், நீ படிச்சா அந்த அக்கா மாதிரி பிச்சை எடுக்க வேண்டாம் என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த கேஷவ் தன் அப்பாவைப் பார்த்து (புரியதவனாக) படிச்சா பிச்சை எடுக்க வேண்டாம்னா எதுக்காக அந்த அக்காவை படிக்க சொல்லல அப்பா என்று கேட்டான்.
5 நொடிகள் தன் மகனையே பார்த்து கொண்டிருந்த அகிலன் தான் செய்த தவறு, Signalஇல் பிச்சை எடுத்து கொண்டு இருக்கின்ற குழந்தைகளுக்குத் தேவை பணத்தை விட படிப்புதான் என்று புரிந்து கொண்டார். அன்று முதல் தனக்குத் தெரிந்த NGO உடன் சேர்ந்து தன்னால் முடிந்த அளவுக்கு பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார் அகிலன்.
Good Moral
ReplyDeleteThank you Saravana
Delete